பல இனப் பிரிவு கட்டம் 3 (MEC3) பங்கேற்பாளர்களுக்கான ஆய்வுத் தகவல்

இந்த ஆய்வு எதற்கானது?

பல இனப் பிரிவு கட்டம் 3 (MEC3) என்பது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS) சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கல்விக்கழகத்தின் சிங்கப்பூர் மக்கள்தொகை சுகாதார ஆய்வுக் (SPHS) குழு நடத்தும் ஓர் ஆய்வாகும். பல இனப் பிரிவு கட்டம் 3 ஒரு நீண்டகாலச் சுகாதார ஆய்வாகும். சமூக பொருளியல் காரணங்கள், சுற்றுபுறம், வாழ்க்கைமுறை, மரபணுக்கள், உயிரியல் காரணங்கள் ஆகியன மக்களின் நலனையும், சுகாதாரத்தையும், நோய்ப்பரவலையும் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை ஆராய்வது ஆய்வின் நோக்கம். இந்தக் காரணங்களை ஆராய்வதன்மூலம், நோயைத் தடுக்க, சுகாதாரத்தை மேம்படுத்த அல்லது தற்பொது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மேம்படுத்த ஆய்வாளர்களால் புதிய வழிகளைக் கண்டறிய இயலும். சுகாதார திட்டங்கள், சிகிச்சைகள் ஆகியவற்றின் செயலாற்றலை மதிப்பிடுவதும், நோய்களினால் நேரும் பொருளாதாரச் சுமைகளை மதிப்பிடுவதும் ஆய்வின் நோக்கங்களாகும்.

சம்பந்தப்பட்டது என்ன?

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

  1. சிங்கப்பூரர்கள்/ நிரந்தரவாசிகள்
  2. 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்
  3. சீனர், மலாய்க்காரர் அல்லது இந்திய இனத்தவர்
  4. இந்த ஆய்வுக்காக ஒப்புதல் பெறுவதையும் நேர்முகப் பேட்டியையும் ஒலிப்பதிவு செய்வதற்கு முன்வருபவர்.
  5. இந்த ஆய்வுக்காக அடையாள அட்டை எண்ணைத் தருவதற்கு முன்வருபவர்.
  6. இந்த ஆய்வின் நோக்கங்களுக்காக, மற்ற அமைப்புகளிடம் உள்ள தரவுகளை அணுகுவதற்கு அனுமதி தர முன்வருபவர்.
  7. இந்த ஆய்வுடன் தொடர்புடைய தகவலலையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பாதிக்கக்கூடிய மனநலப் பிரச்சனை எதுவும் தற்போது இல்லாதவர்.

கர்ப்பமாக இருப்பதாக நினைக்கும் அல்லது தற்தபோது கர்ப்பமாக இருக்கும் பங்கேற்பாளர்கள், குழந்தை பிறந்து 3 மாதங்களுக்குப் பிறகு தங்களது பங்கேற்பைத் தொடங்கலாம்.

எட்டுதல்

இந்த ஆய்வில் மலாய் இந்திய இனத்தவர்கள் தற்போது குறைவாகப் பிரதிநிதிக்கப்படுகின்றனர். அன்புகூர்ந்து, ஆய்வில் பங்கேற்க ஆர்வம் இருக்கக்கூடியவர்களுடன் இந்த இணையதளத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Share via Facebook

Share via WhatsApp (using app)

ஆய்வின் முழுமையான தகவலும் பங்கேற்புக்கான ஒப்புதலும்

பங்கேற்பாளர் தகவல் குறிப்பு
நே்காணலுக்கான ஒப்புதல் படிவம்
ஆய்வுத்தள வருகைக்கான ஒப்புதல் படிவம்

குறிப்பு: இந்த ஆய்வின் ஆய்வுத்தள வருகை உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. நீங்கள் ஆய்வுத்தள வருகையில் பங்கேற்க விரும்பாவிட்டால், “ நேர்காணலுக்கான ஒப்புதல் படிவத்தில் ” மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானது. நீங்கள் ஆய்வுத்தள வருகையில் பங்கேற்பதாக இருந்தால், உங்கள் வருகையின் துவக்கத்தில் , தகுதிபெற்ற சாட்சியின் முன்னிலையில், உங்களிடமிருந்து எழுத்துபூர்வ ஒப்புதல் பெறப்படும்.

சாட்சி அளவுகோல்கள்

சாட்சிக்கு 21 வயது அல்லது அதைவிட அதிகமாக இருக்க வேண்டும். அவர் ஆய்வுக் குழுவின் உறுப்பினராக அல்லது பங்கேற்பாளரின் குடும்பத்தினராக இருக்கலாம், ஆனால் ஒப்புதல் பெறுபவராக / ஆள்சேர்ப்பவராக இருக்கக்கூடாது. பின்வருபவற்றை உறுதி செய்வது சாட்சியின் பொறுப்பு :
a) ஒப்புதல் அளிக்கும் பங்கேற்பாளரின் அடையாளம்;
b) பங்கேற்பாளருக்கு புரியும் மொழியிலஂ ஆய்வு பற்றி அவருக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டது;
c) ஆய்வில் பங்கேறஂகுமஂ நடைமுறையையுமஂ , பங்கேறஂபுடனஂ தொடரஂபுடைய இடர்கள், நனஂமைகளஂ ஆகியவறஂறையுமஂ பங்கேறஂபாளரஂ புரிந்து கொண்டிருக்கிறார் ; அதோடு
d) எந்தவித வலுக்கட்டாயமோ அல்லது ஆச்சுறுத்தலோ இல்லாமல் சுய விருப்பத்தின்பேரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பங்கேற்பது எப்படி?

பதிவுபெறு

  • உங்கள் தகுதியை அறிவிக்க மேலே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும்,மற்றும் இந்த ஆய்வுக்கு பதிவு செய்ய உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்குவும்
  • நீங்கள் பதிவு செய்து 2 முதல் 8 வாரங்களுக்குள், SPHS நியமித்த பேட்டியாளர் ஒருவர், உங்களுடன் தொடர்பு கொள்வார்.
  • பேட்டியாளர் நேர்காணலைத் தொடங்குவதற்கு முன்பாக ஆய்வுத் தகவலை (பங்கேற்பாளர் தகவல் குறிப்பில் உள்ளது பங்கேற்பாளர் தகவல் குறிப்பு) உங்களுக்கு விளக்கி, உங்களிடமிருந்து ஒப்புதல் பெறுவார் . நீங்கள் ஆய்வுத்தள வருகையில் பங்கேற்க விரும்பினால், பேட்டியாளர் உங்களுக்காக முன்பதிவு செய்து கொடுப்பார்.

நீங்கள் தகுதி பெற்றிருந்தும், கொடுக்கப்பட்ட இணைப்பின்வழி சுயப் பதிவு செய்ய இயலாவிட்டால், 6478 9608 என்ற தொலைபேசி எண்ணில் SPHS-ஐ அழைக்கலாம் [திங்கள் முதல் வெள்ளி, காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை, பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து] அல்லது உங்கள் பெயர், விருப்பப்படும் மொழி (கள்), முகவரி, தொடரஂபு எண் ஆகிய விவரங்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் : sphs@nus.edu.sg.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆய்வுத்தள வருகைக்கு முன்பதிவு செய்வது எப்படி?

சுகாதார நேர்காணலின் முடிவில், ஆய்வுத்தள வருகையின் நடைமுறைகள், இடர்கள் பற்றி ஆள்சேர்பபவர் உங்களுக்குத் தகவலளித்து, முன்பதிவு செய்ய உதவுவார். உறுதி செய்யப்பட்ட முன்பதிவு தேதியைக் குறுந்தகவல்வழி பகிறுவார் . முன்பதிவு தேதிக்குக் குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகக் குறுந்தகவல்வழி நினைவூட்டல் அனுப்பப்படும். எங்கள் குறுந்தகவல்கள் “NUS-SPHS” இலிருந்து மட்டுமே அனுப்பப்படும்.

ஆய்வுத்தள வருகைக்கு நீங்கள் வரும்போது, இரண்டாவது அங்கத்தின் நடைமுறைகளைத் போடர்வேற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதை ஊழியர்கள் சரிபார்ப்பார்கள். நீங்கள் தகுதி பெற்றால், அதே நாளில் இரண்டாவது அங்கத்தைத் தொடர்வதற்கு ஊழியர்கள் ஏற்பாடு செய்வார்கள்.

உங்கள் வருகைக்கு முன்

  1. உங்கள் வருகைக்கு முந்திய 7 நாட்களில் ஒப்பீட்டு ஊடகக் கதிரியல் பரிசோதனை அல்லது அணு ஸ்கேன் உங்களுக்குச் செய்யப்பட்டிருக்கக்கூடாது.
  2. DXA ஸ்கேனுக்காக அகற்றப்பட கண்காணிப்புக் கருவிகள் எதையேனும் நீங்கள் அணிந்திருந்தால், உங்கள் வருகை ஒத்திப்போடப்படும் (எ.கா. குளுக்கோஸ் தொடர் கண்காணிப்புக் கருவி, ஹோல்ட்டர் கண்காணிப்புக் கருவி, ஜிபிஎஸ்/இட கண்காணிப்புக் கருவி).
  3. உங்கள் முன்பதிவுதேதிக்கு 5 நாட்களுக்குள் உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், தயவுசெய்து 1 வாரத்திற்கு ஒத்திவைக்கவும்.
  4. முன்பதிவுக்கு முந்திய 24 மணி நேரத்தில் கடுமையான உடற்பயிற்சி மற்றும் கெல்சியம் ஊட்டப்பொருட்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
  5. முன்பதிவுக்கு முந்திய 10 முதல் 12 மணி நேரத்தில் எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம். நீங்கள் தொடர்ந்து வெற்று நீரைக் மட்டும் குடிக்கலாம்.
  6. ஆய்வுததளம் ஓர் ஆராய்ச்சிக்கூடம். அங்கு மின்சாதனங்களும் கூர்மையான உபகரணங்கள் மற்றும் வெந்நீர்க் குடுவைகளும் இருக்கும். இதனால் பிள்ளைகளை ஆய்வுத்தளத்திற்கு அழைத்து வரவேண்டாமென ஆலோசனை கூறுகிறோம். ஏனெனில், வருகையின்போது அவர்கள் கண்காணிக்கப்படாமல் இருப்பார்கள்.

உங்கள் வருகை நாளில் என்ன செய்ய வேண்டும்

  1. முன்பதிவு செய்யப்பட்ட நாளன்று உங்களது அடையாள அட்டையை எடுத்து வாருங்கள். நீங்கள் கண் ஒட்டுவில்லைகள் அணிந்திருந்தால்,அவற்றைக் கழற்றி வைப்பதற்கான உறையையும் எடுத்து வாருங்கள். நீங்கள் செயற்கை பல்வரிசை / பல் தாங்கிகள் அணிந்திருந்தால், அவற்றின் கலன்களையும் எடுத்து வாருங்கள்.
  2. இரத்தம் எடுத்த பிறகு ரொட்டி மற்றும் பிஸ்கட் போன்ற லேசான சிற்றுண்டிகள் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் உங்கள் சொந்த உணவை நீங்கள் கொண்டு வரலாம். ஆய்வு வருகையில் மதிய உணவு இடைவேளை அடங்காது. நீங்கள் நேர்காணலின் போது சாப்பிடலாம் அல்லது மதிய உணவு இடைவேளைக்கு கோரிக்கை வைக்கலாம் (இது நேரத்தை நீட்டிக்கும்).
  3. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், வழக்கம்போல் மருந்தை உட்கொள்ளுங்கள். அந்த மருந்து சாப்பாட்டுக்குப் பிறகு உட்கொள்ளப்பட வேண்டியதாக இருந்தால் உட்கொள்ள வேண்டாம்.
  4. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், முன்பதிவு நாளன்று காலையில் நீரிழிவு மருந்தை உட்கொள்ள வேண்டாம். நீங்கள் வழக்கமாக உட்கொள்ளும் மற்ற எல்லா மருந்துகளையும் கையோடு எடுத்துவந்து, இரத்தம் எடுக்கப்பட்ட பிறகு அவற்றை உட்கொள்ளுங்கள்.
  5. இடுப்புப் பகுதியைத் துல்லியமாக அளவெடுப்பதற்கு ஏதுவாக, இடுப்புப் பகுதியில் தடித்த அல்லது அழுத்தமான ஆடைகளை அணிய வேண்டாம்.
  6. மேல்சட்டை, கால்சட்டை என இரு தனித்தனி ஆடைகளை உடுத்திக்கொண்டு வாருங்கள். உங்கள் நெஞ்சுப் பகுதியிலும் அதனைச் சுற்றிலும் இசிஜி மின்முனைகள் வைக்கப்படும் என்பதால், மேல்சட்டையின் முன்பக்கம் முழுவதும் பொத்தான்கள் அல்லது ஜிப் இணைப்பு உள்ளதாக இருக்க வேண்டும்.
  7. முழு உடலையும் ஸ்கேன் செய்யும்போது, உள்ளாடைகள் தவிர மற்ற ஆடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு,பரிசோதனை அங்கியை அணியும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும். முழு உடல் ஸ்கேனுக்காக நீங்கள் காத்திருக்கையில், அங்கிக்கு மேலே அணிய குளிர்சட்டை எடுத்து வரலாம். ஆய்வுக்கூடத்தில் வெப்பநிலை 18 முதல் 21 டிகிரி செல்சியஸ்.
  8. நகைகள், கழற்றக்கூடிய பல் பொருத்துமானங்கள், செவிப்புலன் கருவி, மூக்குக்கண்ணாடி ஆகியவற்றையும், ஸ்கேனில் குறுக்கிடக்கூடிய வேறு ஏதேனும் உலோகப் பொருட்கள் அல்லது பொத்தான்கள், உலோகக் கொக்கிகள் /கம்பிகள் உள்ள ஆடைகள் ஆகியவற்றையும் அகற்றிவிடுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும்.

ஆய்வுத்தள வருகைக்கான நேரம் என்ன?

புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கும் காலை 10.15 மணிக்கும் இடையில் முன்பதிவு நேரம் கிடைக்கும்.

முன்பதிவு தேதியை நான் எப்படி மாற்றுவது?

உங்களது முன்பதிவு தேதியை மாற்ற, ஆள்சேர்ப்பவருடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் வருகைக்கு சில நாட்களுக்கு முன்பு உங்கள் வருகையை உறுதிப்படுத்த ஆய்வு தளம் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். ‘6601xxxx’/ ‘8020xxxx’/ ‘8030xxxx’ போன்ற தொலைபேசி எண்ணைப் பார்த்தால், மற்றும் அது ‘+65’ உடன் தொடங்கவில்லை என்றால், சந்தேகத்திற்குரிய மோசடி அழைப்பு என உடனடியாக நிராகரிக்க வேண்டாம்.

ஆய்வுத்தளத்திற்கு எப்படிச் செல்வது?

ஆய்வுத்தளம் அமைந்திருக்கும் இடத்தின் முகவரி: தாஹிர் ஃபவுண்டேஷன் பில்டிங் (MD1), 12 சயின்ஸ் டிரைவ்2, #11-01G, சிங்கப்பூர் 117549. (PDF வரைபடம் மற்றும் திசைகள் ).

ஆள்சேர்ப்பவர் இந்த ஆய்வை நடத்துவதற்காக SPHS கல்விக்கழகத்தால் நியமிக்கப்பட்டவர் என்பதை நான் எப்படி உறுதி செய்வது?

ஆய்வுக்காக உங்கள் வீட்டுக்கு வருகையளிக்கும் ஆள்சேர்ப்பவரிடம் கல்விக்கழகத்தின் சின்னத்துடன் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை இருக்கும். அதோடு, SPHS-க்காகப் பங்கேற்பாளர்களைச் சேர்க்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும். சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக கல்விக்கழகத்தின் கடிதத்தையும் அவர் சுகாதாரக கல்விக்கழகத்தின் கடிதத்தையும் வைத்திருப்பார். ஆள்சேர்ப்பவரைப் பற்றி உங்களுக்கு எதாவது கேள்விகள் இருந்தால், 6478 9608 என்ற எண்ணில் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்(திங்கள் முதல் வெள்ளி, காலை 8.30 மணியிலிருந்து மாலை5.30 வரை, பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) அல்லது
sphs@nus.edu.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

இந்த ஆய்வில் என்னுடன் எனது குடும்பத்தாரும் சேரலாமா?

தகுதி நிபந்தனைகளை நிறைவேற்றும் எவர் வேண்டுமானாலும் இந்த ஆய்வில் பங்கேற்கலாம்.

நேர்காணல் செய்யும் நேரத்தையும் இடத்தையும் நான் தீர்மானிக்கலாமா?

ஆம், நீங்கள் தீர்மானிக்கலாம். உங்களுடன் தொடர்புகொண்ட ஆள்சேர்ப்பவரிடம், சுகாதார நேர்காணலுக்கு வசதியான நேரத்தையும் இடத்தையும் நீங்கள் ஏற்பாடு செய்யலாம்.
நேர்காணல் தொலைபேசி அழைப்பு, வீடியோ அழைப்பு அல்லது நேரில் நடத்தப்படலாம். உங்கள் வீடு இல்லையென்றால் மிகவும் அமைதியாகவோ அல்லது தனிப்பட்டதாகவோ இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு இடத்திலோ அல்லது என்யுஎஸ் படிப்பு தளத்திலோ நேரில் நேர்காணல்கள் நடத்தப்படலாம். .பேட்டியாளர் குறித்துக் கொள்வதற்காக, நீங்கள் தற்போது உட்கொள்ளும் மருந்துகளைத் தயாராக எடுத்து வைத்திருங்கள். மருந்துகளின் பெயர், அதன் உட்பொருட்கள், மருந்தின் சக்தி, உட்ககொள்ளும் அளவு ஆகியவிவரங்கள் தேவைப்படும்.

(பென் பங்கேற்பாளர்களுக்கு மட்டும்) ஆய்வுத்தள வருகைக்கு முன்பதிவு உறுதியான பிறகு நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.நான் வருகையில் பங்கேற்கலாமா?

உங்களது முன்பதிவை ரத்து செய்ய 6478 9608 என்ற எண்ணில் SPHS செயல்பாட்டுக் குழுவுடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது sphs@nus.edu.sg முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Back to top ↑

Last updated on 18 October 2024